ரஜினி அவராகவே ஒரு படத்தை பார்க்க விரும்புவது என்பது எப்போதாவதுதான். ஒரு படத்தைப் பற்றி அபரிமிதமான விமர்சனங்கள் வரும்போது மட்டுமே ரஜினியிடமிருந்து அப்படியொரு ஆசை வெளிப்படும்.
எந்திரன் முடிந்து ரிலாக்ஸாக இருக்கும் ரஜினியை ஒரு படம் கவர்ந்திருக்கிறது. பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அந்தப் படம் வசந்தபாலனின் அங்காடித்தெரு.
வழக்கமான சினிமா விமர்சகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவை எப்போதும் சந்தேகத்தோடு பார்க்கும் கறறார் விமர்சகர்கள்வரை வசந்தபாலன் எடுத்துக் கொண்ட கதைக்களத்தையும், அது பேசும் பிரச்சனைகளையும் மனம் திறந்து பாராட்டுகிறார்கள்.
ரசிகர்களையும், விமர்சகர்களையும் ஒன்றிணைக்கும் அங்காடித்தெரு போன்ற அபூர்வ புள்ளிகள் எப்போதாவதுதான் தமிழ் சினிமாவில் உருவாகும். அந்த வகையில் ரஜினி இந்தப் படத்தை பார்க்க ஆசைப்பட்டதில் ஆச்சர்யமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

No comments:
Post a Comment