ரஜினிகாந்த் என்கிற நடிகர் எப்படி தமிழ்மக்களை கவர்ந்தார்? தமிழ் சூப்பர் ஸ்டாராகி முடிசூடா மன்னனாக எப்படி ஆனார்? இவருக்கு உண்மையிலேயே நடிப்புத் திறமை ஏதாவது இருந்ததா? இல்லை சும்மா சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிச்சு விளையாண்டு ஸ்டெயில் என்கிற பேரில் மக்களை கவர்ந்தாரா
ரஜினியின் அரசியலையோ, ஆன்மீகத்தையோ, நம்பிக்கையையோ, அவர் குடும்ப வாழக்கையையோ பற்றி இங்கே நான் பேச வரவில்லை. 1974 ல அபூர்வ ராகங்களில் அறிமுகமான ரஜினி என்கிற நடிகர், தமிழ் சினிமாவில் எப்படி சூப்பர் ஸ்டார் ஆகும் இந்த அளவுக்கு வளர்ந்தார் என்பதை மட்டும் பற்றி பார்ப்போம்
ரஜினியின் அப்பா ஒரு டைரக்டரோ அல்லது பெரிய நடிகரோ அல்லது படமெடுக்கும் அளவுக்கு பணக்காரரோ கிடையாது. ரஜினி, தமிழ் சினிமாவில் நுழையும்போது தமிழர் அல்ல! இவர் நடிக்க வரும்போது இவருக்கு எதுவும் பெரிய இடத்து சிபாரிசு கிடையாது! இருந்தும் ரஜினியிடம் இருக்கிற ஏதோ ஒண்ணு கே பாலசந்தரை கவர்ந்தது. இவர் முதல் படமான அபூர்வ ராகங்களில் பாலசந்தர் இவருக்கு ஒரு சின்ன வாய்ப்பு கொடுத்தார்.அதே நேரத்தில் பல படங்களில் இவருக்கு [மூன்று முடிச்சு, அவர்கள், அவள் ஒரு தொடர்கதை (தெலுங்கு வேர்ஷன்)] வாய்ப்பு கொடுத்தார் பாலசந்தர். பாலசந்தர் இதுபோல் பல நடிகர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளார், ரஜினிக்கு மட்டுமல்ல. உதாரணமாக நடிகை சுஜாதா, நடிகர் கமலஹாஷன் போன்றவர்களுக்கும் இதேபோல் வாய்ப்பு கொடுத்தார்.
ரஜினிகாந்தின் வளர்ச்சியின் வேகத்தைப்போல் எந்த ஒரு நடிகனும் தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் வளர்ந்ததில்லை. ரஜினிகாந்தின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் ஒரு தனி வரலாறு என்று சொன்னால் அது மிகை இல்லைதான். எம் ஜி ஆர், சிவாஜி கூட இவ்வளவு வேகமாக வளரவில்லை.1975 லிருந்து ரஜினி ஒரு மிகவும் பிஸியான நடிகராகிவிட்டார்! அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு மார்க்கட் என்றுமே கீழேபோகவில்லை! இவருடைய நடிப்பு, அன்றைய பெரிய நடிகர்கள், எம் ஜி ஆர் போலவோ, சிவாஜி போலவோ, ஜெய்சங்கர் போலவோ, சிறிய நடிகர்கள் சிவகுமார் போலவோ கமஹாஷன் போலவோ இல்லை. ரஜினியின் நடிப்பு அவருக்கே உரிய ஒரு புது பாணியில் தனி "ஸ்டயிலுடன்" இருந்தது மூன்று முடிச்சு படத்தில் இவர் நடிப்பைப்பார்த்த தமிழ் ரசிகப்பெருமக்கள் அசந்துபோனார்களாம்! இவரோட திரையுலகம் வந்த சக நடிகர்கள் மிரண்டு போனார்கள் என்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவர் வில்லனாக இவர் நடித்த அவர்கள் (ராமனாதன்), 16-வயதினிலே (பரட்டையன்), போன்ற படங்களில் இவருடைய நடிப்பைப்பார்த்து தமிழ்மக்கள் இவருடைய நடிப்புத்திற்மை பார்த்து பலவாறு புகழ்ந்து தள்ளினார்களாம். இவர் வில்லனாக நடித்ததை விமர்சகர்கள், "People loved to hate him! என்றார்களாம்.
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் போலவும், பாலிவுட் நடிகர் சத்ருகன் ஷினா போலவும் ரஜினியின் ஸ்டயில் இருந்ததாக ஒரு சிலர் சொன்னாலும், இவருடைய "16-வயதினிலே பரட்டையன்", "அவர்கள் ராமநாதன்" போன்ற ரோல்களில் இவர் தமிழருக்கே ஆன திமிர்பிடித்த ஆட்டிடூடுடன் அபாரமாக நடிப்பதைப்பார்த்த தமிழ்மக்கள் அதெல்லாம் இல்லை ரஜினியின் நடிப்பு தனித்துவம் (யுனீக்) என்று விவாதம் பண்ண ஆரம்பித்தார்கள்.
பிறகு இவர் ஹீரோவாக நடித்த புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் நடித்த "சம்பத் கேரக்டர், முள்ளும் மலரும் படத்தில்,வந்த காளி கேரக்டர் மற்றும் ஆறிலிருந்து அறுபது வரை சந்தானம் கேரக்டர் கள், ரஜினிகாந்து ஒரு திறமைமிக்க நடிகர் என்று சந்தேகமே இல்லாமல் நிரூபித்தது. இப்படியே வளர்ந்தவர்தான் இன்றைய சூப்பர் ஸ்டார்.

..ரஜினிகாந்த் என்ற மனிதர் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆகவில்லை அதை இன்றைய அரவேகாடு நடிகர்கள் புரிந்திகொளுங்கள் ...
No comments:
Post a Comment